Friday, March 27, 2020

மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்

மறுபிறவி_இல்லாத_சிவன்_ஆலயம்





மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.

மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..

செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.

வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.

மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..

கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..

இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.
ருத்ராக்ஷேவரேர் திருக்கோவில்.

#இடம்:-தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

ஓம் நமசிவாய.

""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்
மெய்யே உன் பொன்னடிகள்  கண்டின்று வீடுற்றேன் ''

 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது ; ஆயினும் இந்த அறிய பிறவியை விடுத்து பிறவாமை  என்னும் பெரும் பேறையே நாடும் இறையடிகலார்களின் உள்ளம்.

அத்தகைய பேரின்ப நிலையை அருளும்  திருத்தலமாக  விளங்குகிறது கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக 7  கி.மீ தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர்.

புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இத்திருத்தலத்திற்கு சென்று இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று ஐதிகம்.

#இத்திருக்கோவில்_மிகவும்_பழமையானது.

மற்ற கோவில்களுக்கும் இந்த கோவிலுக்கும் பல விதிகள் மாறுபட்டு காணப்படுகிறது .

ஆம்  இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

இக் கோவிலுக்கு அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது விதிப்பயனே இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படும் ஆமாம் யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் .

பக்தர்களுக்கு பிரதோஷகாலத்தில் மட்டும்  வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமியைத் தரிசித்ததும்  பிரசாதமாக வில்வத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

வேதாந்த நாயகி அம்பாள்:

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை  நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அம்பாள்  வேறெங்கும் காணக்கிட்டாத காட்சியாக  வலது காலை எடுத்து வைத்து  முன்னோக்கி வந்து நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் அம்பாள்  தோற்றத்தில்  அருள்புரிகிறாள். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சன்னதியில் நான்கு வருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில்  அணைவதும்  மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது பெரும் அதிசய நிகழ்வாக இருந்தது தேப்பெருமானல்லூர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்த காட்சியையும் அம்பாளையும் வழிபட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 #பைரவர்:

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று  பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். ஒரே கோவிலில் இரண்டு பைரவர் இருப்பதும் இங்கேதான்.

இந்த இரண்டு பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனை பார்த்த வண்ணம் காட்சி தருகிறார்.

சனிபகவான்  ஏன் ஒய்யாரமாக நிற்கிறார் என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார்கள்.

இறைவன் ஈசனை  சனி பகவான்
பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் இப்படி ஒய்யாரமாய் காட்சியளிக்கிறார்.

சனிபகவான்  அம்பாளிடம், என் பணி சரியாக செய்வேன்  ""நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுதில்  ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னாராம் .

அதன் படி அடுத்தநாள்  ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் வந்தாராம் . அப்போது அம்பாள் , ஈஸ்வரனை காப்பாற்ற  பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

சனி பகவான் அங்கு வந்து மரத்திற்கு அருகில் இருக்கும்  அம்பாளைப் பார்த்ததும்  ஈஸ்வரன் இங்கேதான்  இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாராம்  அதன் பிறகு  அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அம்பாள்  சனி பகவானைப் பார்த்து,

"என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள்.

சனி பகவான், "நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது.

என் பார்வையில் ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க ஏழேகால் நாழிகை நேரமே நான் அவரைப் பிடித்திருந்த  நேரம்'' அதுவும் உங்களுடைய ஒத்துழைப்பில்  என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, "ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன்.

நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள்.
எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பதும் இங்கு  ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை.

அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன்.

இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள்.

அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது.

இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது.

எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்டநாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

"பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார்.

அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார்.

அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார்.

அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.

இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார்.

வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர்,
"பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார்.

அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, "மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை.

இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன்.

உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், "மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார்.

இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார்.

 இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார்.

ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது.

அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார்.

ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.

அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது.

ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள்.

#நந்தி :

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார்.

இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது.

அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

#ஸ்ரீதட்சிணாமூர்த்தி : #அன்னதானதக்ஷ்ணாமூர்த்தி

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர்.

இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது.
இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

#ராகுகேது :

இத்திருக்கோவிலில் ராகு பகவானும் கேது பகவானும் ஒரே இடத்தில் அருள் புரிகின்றார்கள் . வேறு எங்கேயும் இப்படி இருவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருவது இல்லை. ஒரே இடத்தில் இருவரையும் வணங்கும் படி ஒற்றுமையோடு அருள்கின்றனர்.

#நவக்கிரகம் :

நவகிரகங்கள் ஒவ்வொன்று மாறு திசையில் இருப்பதும் இங்கு தான்.

#கர்ப்பகிரகம் :

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

#தீர்த்தம்:

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

#நாகம்_வந்து_வழிபடுகிறது :

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

#கோவில்_முகவரி:
1/15,அக்ரஹாரம் ,
தேபெருமாநல்லூர்  - (po)
தேபெருமாநல்லூர் - (Tk),
கும்பகோணம் - 612 206.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்...

ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம்பெண்ணுரு ஆனாய் போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி எங்கும் பரவி எதிலும் நிறைந்த பரம்பொருளே எம்மை ஆளும் பார்வதி பரமேஷ்வரா போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் பதிணென் சித்தர்கள் போற்றி

ஓம் குருவின் திருவடி சரணம்

ஓம் ஸ்ரீபஹூளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டர் சித்தசுவாமியே போற்றி போற்றி

ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஹர ஹர சம்போ மகாதேவா சதா சாம்பசிவா ஓம் ருத்ராகேஸ்வரா...

"ஓம் வேதாந்தநாயகி சமேத விஸ்நாதாய நமசிவாய ருத்ராகேஸ்வராய நமஹ"

நினைப்பதும் நீ நினைக்க வைப்பதும் நீ நடப்பதும் நீ நடக்க வைப்பதும் நீ சர்வமும் நீ சகலமும் நீயே என் அம்மையப்பா மரணத்திலும் மகேஸ்வரா உன்னை மனதார நினைக்கின்ற மனம் வேண்டும் நீயே நானாக நானே நீயாக எல்லாவுமாய் இருப்பவனே எம்மை ஆளும் பார்வதி பரமேஷ்வரா உம் திருவடி சரணம்! சரணம்!!
சுவாமி : சிவன்.
தலச்சிறப்பு : இத்தல சிவனை சேவித்தால் பக்தர்கள் முக்திஅடைவர். இதனால் மறுபிறவி இருக்காது என்பது ஐதீகம். இத்தலத்தில்  உள்ளே சென்றால் முதலில் விநாயகரை தரிசிக்கலாம்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோவில் முகவரி : தேபெருமாநல்லூர் சிவன் கோவில்,
தேபெருமாநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

Saturday, March 16, 2019

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

               பஞ்சவர்ணேசுவரர்


                                                                 சிவாலயம்
                                                              உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.


முக்கீச்சுரம்

உறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது..



                                               தல வரலாறு

                                                           சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.


                                                            உதங்க மாமுனிவர்

                                                       உதங்க மாமுனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க மாமுனிவர்   வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.



                                          புகழ்சோழ நாயனார்

                                                                    நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.   மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.




                                                           கல்வெட்டுகள்

                                           இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.




                              இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார்.
சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன். இந்த மண் சித்தர்கள். நாயன்மார்கள் வாழ்ந்த மண்



Tuesday, February 5, 2019

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

               பஞ்சவர்ணேசுவரர்

                                                                 சிவாலயம்
                                                              உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.


முக்கீச்சுரம்

உறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது..



                                               தல வரலாறு

                                                           சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.


                                                            உதங்க மாமுனிவர்

                                                       உதங்க மாமுனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க மாமுனிவர்   வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.



                                          புகழ்சோழ நாயனார்

                                                                    நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.   மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.




                                                           கல்வெட்டுகள்

                                           இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.




                              இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.

Sunday, December 16, 2018






திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிப் பிரபலமாகிய ‘உள்ளம் உருகுதையா, முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்கோர் ஆசை பெருகுதப்பா’ போன்ற உள்ளத்தை உருக்கும் எண்ணற்ற பாடல்களைப் பாடிய ஆண்டவன்  பிச்சி அம்மா, முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தார்.

ஆண்டவன் பிச்சி - இவ்விளம்பர யுகத்தில் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாமல் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ‘ஆண்டவன் பிச்சி’ என்று மகா பெரியவாளால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மரகதவல்லி அம்மாள்.

(ஆண்டவன் பிச்சை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு) இரண்டு வயதிலேயே தாயை இழந்து, படிப்பு, பாட்டு ஏன் விளையாட்டிலும்கூட நாட்டமில்லாதிருந்த எட்டு வயது மரகதத்திற்குக் குடும்பத்தினர் திருமணம் செய்வித்துப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தைவழிப் பாட்டி சுந்தரி அம்மாள் மட்டும் “இப்பெண்ணிற்கு நல்ல அறிவைக் கொடுப்பாயாக’’ என்று இடைவிடாமல் முருகனை வேண்டிக் கொண்டிருந்தார்.

பத்து வயதிருக்கும்போது, பிறந்த வீட்டிற்கு வந்திருந்த மரகதத்தின் வாழ்க்கையைத் திசை மாற்றிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. முருகப் பெருமான், குழந்தை மரகதத்தின் கனவில் தோன்றி, ஆடும் பரிவேல், அணி சேவலுடன் வந்து அவள் நாவில் பிரணவத்தைப் பொறித்தான். பள்ளிக்கே சென்றிராத, படிப்பறிவு சிறிதுமில்லாத மரகதத்தின் வாக்கில், மடை திறந்த வெள்ளம்போல் பக்திப் பாடல்கள் பெருக்கெடுத்தன. ஷடாக்ஷர மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, எப்போதும் ஜபம் செய்யும் படிக் கூறி மறைந்தான் முருகன்.

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகளுக்குத் தாயானாள் மரகதம். ஐந்தாவது பிரசவம் மிகக் கடுமையாக இருந்தது. கந்த சஷ்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கந்த சஷ்டி நாளன்று மாலை, வீட்டிலிருந்த மற்றவர்கள் சூரசம்ஹார விழாவைக் காணச் சென்று விட்டனர். இரவு ஜுர வேகத்தில் அரற்றிக் கொண்டிருந்த மரகதத்திற்கு ஒரு கனா வந்தது. அதீத அழகுடன் தோன்றிய முருகன் ஒன்றரை வயதுக் குழந்தையாய் மரகதத்திடம் வந்து ‘என்னை எடுத்துக் கொள்’ என்று கெஞ்சினான்.

வாரி அணைத்துக் கொண்ட மரகதம் ‘நீ யார்’ என்றதும் ‘மால் மருகன்’ என்றான் குழந்தை. ‘எனக்கு ஒரு தாலாட்டுப் பாடேன்’ என்று குழந்தை கூறியதுதான் தாமதம், ஆனந்த சாகரத்தில் மூழ்கிய மரகதம், இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை முருகன் மேல் பாடினாள். பிரசவ அறையில் உதவிக்கிருந்த பெண் ஓடிச்சென்று பென்சிலும் காகிதமும் கொண்டு வந்து அப்படியே அவற்றை எழுதி எடுத்துக் கொண்டாள்.

உணர்ச்சி வசப்பட்டு மரகதம் நடுநிசியில் உரக்கப் பாடியது மாமியார் செவிக்கு எட்டியது. கோபத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தவர், இரண்டுநாளே ஆன குழந்தை அழுது கொண்டிருந்த¬
தக்கூட கவனிக்காமல் பாடிக் கொண்டிருந்த மருமகளைக் கண்டு ‘குழந்தை அழுறதுகூடத் தெரியாமல் அப்படி என்ன பாட்டு, ஆண்டிமேல்! ஆண்டியைப் பாடும் உன்னால் இந்தக் குடும்பமே பிச்சை எடுக்கப் போகிறது.

இனிமேல் முருகனைப் பற்றிப் பாடவோ எழுதவோ ஏன் பேசவோகூட மாட்டேன் என்று உன் கணவர், குழந்தைகள் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்’’ என்று கோபத்துடன் கூறியதும் பயந்துபோன மரகதம் அப்படியே செய்தாள். அதே வேகத்துடன் மாமியார், அப்பாடல்கள் அடங்கிய புத்தகத்தை ஒரு பெட்டியில் போட்டுப் பெரிய பூட்டையும் மாட்டி விட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் 24 வருடங்கள் ஓடிய பின்னரே மரகதத்தின் மாமியார் இறைவனடி சேர்ந்தார். இவ்வளவு காலமும், மனது துடித்த போதிலும் மரகதம் வாய் திறந்து முருகனைப் பற்றி பேசவோ, வாய் திறந்து பாடவோ செய்யவில்லை. ஆனால், இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. உறவுப் பெண்மணி ஒருவர் வந்து தான் நடத்தும் பத்திரிகைக்கு ஒரு பாட்டு எழுதித் தருமாறு மரகதத்திடம் கேட்டார்.

“நான் பாடியே எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டனவே’’ என்று கூறிய மரகதம்மாள், மாமியார் பூட்டி வைத்த பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே பெரும் அதிசயம் காத்திருந்தது. ஒரு அட்டைப் பெட்டிக்குள் மாமியார் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரித்துப்போயிருந்தன. ஆனால், ஆண்டியின் மேல் மரகதம்மாள் பாடிய பாடல்கள் அடங்கிய புத்தகம் மட்டும் அப்படியே இருந்தது!

1949 ஜனவரி 21. விடியற்காலையில் அம்மா அருகில் குழந்தையாகத் தோன்றினான் முருகன். “எல்லாப் பாடல்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டாயே! மீண்டும் என்மேல் பாட ஆரம்பி.’’ என்றான்.

கணவர் மீதும் குழந்தைகள் மீதும் ஆணையிட்டிருந்தபடியால் அவர்களுக்கு ஏதும் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று பயந்தாள் மரகதம். “பேனாவைப் பிடித்திருப்பது உன் கை; எழுதுவது என் செயல்’’ என்று கூறி மறைந்தான் முருகன். அன்று அவன் எடுத்துக்கொடுத்த அடியை வைத்து “அருணோதய சூர்யபிம்பமதுபோல் முகமும்“ என்று துவங்கி 108 பாடல்களை எழுதினார் மரகதம்மாள். அதுவே ‘ஆத்ம போதம்’ என்ற பாடல் தொகுப்பாக வெளிவந்தது.

உள்ளம் உருகுதய்யா...

உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

பாடிப் பரவசமாய் - உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி - முருகா
ஓடி வருவாயப்பா

பாசம் அகன்றதய்யா - பந்த
பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே - எந்தன்
ஈனம் மறைந்ததப்பா

ஆறுத் திருமுகமும் - உன் அருளை
வாரி வழங்குதய்யா
வீரமிகுந்தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா

கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் - எனக்குன்
பதமலர் தருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

******************************************************************

“உள்ளம் உருகுதய்யா ..!”

-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு ,
 உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
 ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

 பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்... முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”

 வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.
 எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

 பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!

 ஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
 .
 பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
 கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .
காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :
 “உள்ளம் உருகுதடா...”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.
அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ !

 யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ?
 டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.
 பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .
 பள்ளிக்கு செல்லாதவள் .படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

 ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ... காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’..

 சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
 .
 அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..!

 அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.
சரி ... இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?

டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?

# இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில்  எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை.
 கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.

“பாசம் அகன்றதய்யா - பந்த
 பாசம் அகன்றதய்யா
 உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
 ஈசன் திருமகனே
 எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா !”

இவர்தான் அந்தப் பாடலை எழுதிய ஆண்டவன் பிச்சி அம்மாள்

Tuesday, November 27, 2018

L4, L5 முதுகுஎலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத முருங்கை கஞ்சி வைத்தியம்....!!

செய்முறை:

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை நன்றாக கழுவி  எடுத்து ,மிக்ஸியில்  அரைத்து இரண்டு லிட்டர் வரும்படி சாறாக்கி
கொள்ளவும்.

இந்த இரண்டு லிட்டர் முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி,ஐம்பது கிராம் மிளகு ,இருநூறு கிராம் பாசிபருப்பு,சிறிது,சுக்கு ,மற்றும்
 ஏலக்காய் சேர்த்து, வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

முருங்கை சாறில் அரிசி மற்றும் இதர பொருட்கள் நன்றாக  ஊறவேண்டும்...!!

இவை அனைத்தும் நன்றாக ஊறியபின்பு மறுபடியும்  ஈரப்பதம் போகும் வரை  வெயிலில் காயவைத்து,சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,
கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,
L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,
" disc prolapse " ஆவது ...
இவை அனைத்துக்குமே  முழுமையான மருந்து இந்த
முருங்கைக்கீரை கஞ்சிதான் ....!!

அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்துகொண்டுள்ள இந்த
 முருங்கைக்கீரைக் கஞ்சியை
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,
உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!

அனைவருக்கும் பகிருங்கள்...!!
பயன் பெறுங்கள்....!!

Sunday, September 30, 2018

Friday, December 18, 2015

DIANAMALAR DRAWING COMPETITION - 19-12-2015

DIANAMALAR DRAWING COMPETITION - 19-12-2015

DESIGN By

                E.RAKSHEETHA PRIYA."VI" STD

DIANAMALAR DRAWING COMPETITION - 19-12-2015

DIANAMALAR DRAWING COMPETITION - 19-12-2015
DIANAMALAR DRAWING COMPETITION - 19-12-2015

Sunday, December 6, 2015

United Nations' International Day of Persons with Disabilities - 03-12-2015

PENCIL DRAWING  By E.Raksheetha Priya

ஊனம் 
"""உடலில் உண்டு 
எங்கள் 
உள்ளத்தில் இல்லை """

United Nations' International Day of Persons with Disabilities
From Wikipedia, the free encyclopedia
International Day of Persons with Disabilities (December 3) is an international observance promoted by the United Nations since 1992. It has been celebrated with varying degrees of success around the planet. The observance of the Day aims to promote an understanding of disability issues and mobilize support for the dignity, rights and well-being of persons with disabilities. It also seeks to increase awareness of gains to be derived from the integration of persons with disabilities in every aspect of political, social, economic and cultural life. It was originally called "International Day of Disabled Persons" until 2007.[1] Each year the day focuses on a different issue.




Tuesday, September 15, 2015

DRAWING COMPETITION LIC - 2015-2016

      DRAWING COMPETITION - LIC ( 2015-2016 )


திருச்சியில் LIC ல் நடைபெற்ற VI ம் வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் என் மகள் இ.ரக்ஷிதபிரியா அவர்கள் 
முதல் பரிசு (FIRSTPRIZE ) பெற்றார் ....

LIC DRAWING COMPETITION 


LIC DRAWING COMPETITION 

இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த திருச்சி LIC நிறுவனத்தாருக்கு எங்கள் பணிவான நன்றி நன்றி..


                                        ரக்ஷீத பிரியா வரைந்த ஓவியம் 
LIC DRAWING COMPETITION 

Saturday, September 5, 2015

DRAWING COMPETITION - 03-09-2015


இந்தியாவின் வருங்கால தலை சிறந்த ஓவியர்களும் ..
அவர்கள் வரைந்த ஓவியங்களும் ..

school name : Mahatma gandhi centenary vidhyalaya. Trichy.
std : VI "C"






Thursday, September 3, 2015

COMPETITION DRAWING - 31-08-2015

                          DRAWING COMPETITION

              "SAVE ENERGY
                                           SAVE ENVIRONMENT"

My Daughter
RAKSHEETHA PRIYA DRAWINGS 

"SAVE ENERGY
                                           SAVE ENVIRONMENT"

"SAVE ENERGY
                                           SAVE ENVIRONMENT"

DRAWING COMPETITION - 03-09-2015


இந்தியாவின் வருங்கால தலை சிறந்த ஓவியர்களும் ..
அவர்கள் வரைந்த ஓவியங்களும் ..

school name : Mahatma gandhi centenary vidhyalaya. Trichy.
std : VI "C"






ரக்க்ஷீதாவின் பொக்கிஷங்கள்